உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தண்ணீர் பந்தலில் ரவுண்டானா அமைக்க மா.கம்யூ. ஆர்ப்பாட்டம்

தண்ணீர் பந்தலில் ரவுண்டானா அமைக்க மா.கம்யூ. ஆர்ப்பாட்டம்

கோவை: பீளமேடு பகுதியில், எஸ் பெண்ட் ரவுண்டானா மற்றும் சாலை பணிகளை விரைந்து முடிக்க கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. அவிநாசி ரோடு ஹோப் காலேஜை ஒட்டியுள்ள தண்ணீர் பந்தல் எஸ் பெண்டில் ரவுண்டானா அமைக்க, மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி நிதி ஒதுக்கீடு செய்தும், நில எடுப்பு பணி இன்னும் முடியவில்லை. உடனடியாகரவுண்டானா பணிகளை விரைவுபடுத்தி, போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கொடிசியா முதல் என்.ஆர்.ஐ. கார்டன் வரையிலான திட்டச்சாலை பணிகளை, உடனே துவங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அஜய்குமார், தெய்வேந்திரன், நகர குழு செயலாளர் மேகநாதன், மாவட்ட குழு உறுப்பினர் ஜோதிமணி, மணி, பாண்டியன் உள்ளிடடோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !