உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நகராட்சியில் மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை; வெள்ள நிவாரண குழு உருவாக்கம்

நகராட்சியில் மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை; வெள்ள நிவாரண குழு உருவாக்கம்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பருவமழையின் தாக்கம் ஏற்பட்டால், அதனை கண்டறிந்து தடுக்கும் வகையில், வெள்ள நிவாரணக்குழு அமைக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சியில் கடந்த இரு தினங்களாக, பருவமழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அவ்வபோது, திடீரென கனமழை பெய்தும் வருகிறது.இதனால், நகராட்சியில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து துறை அலுவலர்களை உள்ளடக்கி வெள்ள நிவாரணக்குழு அமைக்கப்பட்டுள்ளது.இது குறித்து நகராட்சி கமிஷனர் கணேஷன் கூறியதாவது: பொள்ளாச்சி நகராட்சி, 13.87 ச.கி.மீ., பரப்பளவு கொண்டதாகும். நகராட்சியில், 130.94 கி.மீ., துாரத்திற்கு, மழைநீர் வடிகால் கால்வாய்கள், 642 சிறுபாலங்கள் மற்றும் கல்வெட்டுகள் கொண்டுள்ளது.சின்னாம்பாளையம் ஊராட்சியில் துவங்கும் நீரோடை, மரப்பேட்டை பெரியார் காலனி, நடராஜ் மணியகாரர் காலனி, கண்ணப்பன் நகர் என நகராட்சியின் மையப்பகுதி நீள்கிறது.மேலும், பொட்டுமேடு, மரப்பேட்டை பள்ளம், சுடுகாட்டு பள்ளம், நேரு நகர், பெரியார் காலனி, கல்லுக்குழி, குமரன் நகர், கண்ணப்பன் நகர், அண்ணா காலனி, ஜீவா ஷெரிப் காலனி, மோதிராபுரம் இட்டேரி, மருதமலை ஆண்டவர் லே அவுட் உள்ளிட்ட பகுதிகள் தாழ்வாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.இதனால், அப்பகுதி மக்களுக்காக, தெப்பக்குளம் நகராட்சி நடுநிலைப்பள்ளி, சிக்கன்செட்டியார் தொடக்கப்பள்ளி, குமரன் நகர் நகராட்சி தொடக்கப்பள்ளி, ஏ.பி.டி., ரோடு நகராட்சி தொடக்கப்பள்ளி, பாலக்காடு ரோடு நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என, ஐந்து பள்ளிகளில், நிவாரண மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, மின்சாரம், குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.மேலும், அனைத்துத்துறை அலுவலர்களை உள்ளடக்கி வெள்ள நிவாரணக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்யப்பட்டும் வருகின்றன. பருவ மழையை எதிர்கொள்ள, 40 துாய்மைப் பணியாளர்கள் தயாராக உள்ளனர்.தவிர, 3 பொக்லைன் இயந்திரம், 2 குடிநீர் வாகனம், 4 கழிவு அகற்றும் வாகனம், மரம் அறுக்கும் இயந்திரம், ஜெனரேட்டர், மோட்டார் பம்பு, டார்ச் லைட், புகை மருந்து தெளிக்கும் இயந்திரம், மணல் மூட்டைகள் உள்ளிட்ட தளவாட பொருட்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.கட்டுப்பாட்டு அறை துவக்கப்பட்டுள்ளது. பாதாளச் சாக்கடை தொடர்பான புகாருக்கு 94450 75903, தெரு விளக்கு - 86675 73367, குடிநீர் -99659 67652, பிற உதவிகளுக்கு 94403 95762 ஆகிய மொபைல்போன் எண்களில், 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ