உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சாலையோர கடையில் உணவருந்திய முருகன்

 சாலையோர கடையில் உணவருந்திய முருகன்

அன்னூர்: மத்திய இணை அமைச்சர் முருகன் சாலையோர தள்ளுவண்டி கடையில், உணவருந்தியபடி ஆதரவு திரட்டினார். அவிநாசி தொகுதி பா.ஜ., வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான முருகன் நேற்று முன்தினம் இரவு அன்னூர் பேரூராட்சியில், குமாரபாளையம், காக்காபாளையம், சொக்கம்பாளையம், குன்னத்தூராம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டு சேகரித்தார். பிரசாரம் முடிவடைந்த பிறகு, இரவு அன்னூரில், கோவை சாலையில், அரசு மருத்துவமனை அருகே சாலையோரத்தில் உள்ள தள்ளுவண்டி கடையில் அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., நிர்வாகிகளுடன் சேர்ந்து உணவருந்தினார். உணவு சுவையாக உள்ளது என பாராட்டு தெரிவித்தார். அங்கு உணவருந்திக் கொண்டிருந்த மற்றவர்களிடம் ஓட்டு கேட்டு ஆதரவு திரட்டினார். மத்திய இணை அமைச்சர் சாலையோர கடையில் உணவு அருந்தியதை பொதுமக்கள் வியப்புடன் பார்த்தபடி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை