உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  செம்மொழி பூங்காவுக்கு மாறிய அருங்காட்சியகம்

 செம்மொழி பூங்காவுக்கு மாறிய அருங்காட்சியகம்

கோவை: கோவை நேரு விளையாட்டு அரங்க வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த அரசு அருங்காட்சியகம், செம்மொழி பூங்காவுக்கு மாற்றப்பட்டுள்ளது. கோவையில் உள்ள அரசு அருங்காட்சியகம், 1990ம் ஆண்டு துவங்கப்பட்டது. 2013ம் ஆண்டு முதல் நேரு விளையாட்டு அரங்கின் வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்தது. தற்போது இந்த அருங்காட்சியகம் செம்மொழி பூங்காவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கென, தனியாக அரங்கம் ஒன்று அங்கு அமைக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியக காப்பாட்சியர் குணசேகர் கூறுகையில், ''தொல்லியல் சின்னங்களை நிலையாக பாதுகாத்து வைக்க தனி இடம் இல்லாமல் இருந்தது. செம்மொழி பூங்காவில் இதற்கென, தனி அரங்கம் ஒதுக்கப்பட்டு உள்ளதால், இனி பார்வையாளர்கள் வந்து பார்வையிட வசதியாக இருக்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ