என் ஓட்டுச்சாவடி வெற்றி ஓட்டுச்சாவடி!
பொள்ளாச்சி: பொள்ளாச்சி வடக்கு மத்திய ஒன்றியத்தில், தி.மு.க. சார்பில், என் ஓட்டுச்சாவடி, வெற்றி ஓட்டுச்சாவடி என்ற பரப்புரை நடந்தது. தமிழகத்தில், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி 'என் ஓட்டுச்சாவடி, வெற்றி ஓட்டுச்சாவடி' என்ற பரப்புரையை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.அதை தொடர்ந்து, கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், 'என் ஓட்டுச்சாவடி, வெற்றி ஓட்டுச்சாவடி' பரப்புரை, பொள்ளாச்சி வடக்கு மத்திய ஒன்றியத்தில், வடக்கிப்பாளையம் ஓட்டுச்சாவடி எண், 64, வடக்கு மேற்கு ஒன்றியத்தில் மாப்பிள்ளைக்கவுண்டன்புதுார் ஓட்டுச்சாவடி எண், 59 ஆகியவற்றில் நடந்தது. மாவட்ட செயலாளர் முருகேசன், பரப்புரையை துவக்கி வைத்து பேசினார். இதில், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், ராஜூ, கட்சி நிர்வாகிகள், ஓட்டுச்சாவடி முகவர்கள் பங்கேற்றனர். * நெகமம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் இருக்கும் வீடுகளில் பேரூராட்சி நிர்வாகத்தினர் சார்பில் வீடு வீடாக சென்று பரப்புரை செய்தனர். இதில், பேரூராட்சி தலைவர் ஆர்த்தி, தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.