உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நொய்யல் ஆற்றங்கரையில் மர்ம விலங்கு நடமாட்டம்

நொய்யல் ஆற்றங்கரையில் மர்ம விலங்கு நடமாட்டம்

சூலுார்: மாதப்பூர் நொய்யல் ஆற்றங்கரையில் மர்ம விலங்கு நடமாட்டத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சூலுார் அடுத்த கரவளி மாதப்பூர் நொய்யல் ஆற்றங்கரை பகுதியில் தன்னாசியப்பன் கோவில் உள்ளது. இப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு கன மழை பெய்தது. நேற்று காலை அப்பகுதிக்கு சென்றவர்கள், தோட்டத்தில் மர்ம விலங்கின் கால் தடத்தை கண்டு அச்சமடைந்தனர். புலியின் கால்தடம் என, மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விளை நிலங்களில் இருந்த கால் தடங்கள் எந்த விலங்குடையது என, வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ