மேலும் செய்திகள்
திருப்பூர் வருகையை முதல்வர் தவிர்த்தாரா?
12-Aug-2025
கோவை; குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் அபியாசா நடனப்பள்ளி சார்பில், நடன கலைஞர் அனிதா ரத்னத்தின், 'நாச்சியார் நெக்ஸ்ட்' என்ற நாட்டிய நாடகம், கோவையில் முதன்முறையாக அரங்கேற்றப்படுகிறது. ஆண்டாளின் வாழ்க்கை வரலாற்றை நவீன முறையில் சொல்லும், 70 நிமிட நாட்டிய நாடகம், 31 ஞாயிறு மாலை 6.30 முதல் 8 மணி வரை குமரகுரு கல்லுாரி வளாகத்தில் உள்ள ராமாநந்த அடிகளார் அரங்கத்தில் நடைபெறுகிறது. அபியாசா அகாடமி நிறுவனர் லாவண்யா சங்கர் கூறுகையில், ''அரங்கம் டான்ஸ் தியேட்டரின் தயாரிப்பான, 'நாச்சியார் நெக்ஸ்ட்' நாட்டிய நாடகம், காலத்தை வென்ற ஆண்டாளின் பக்திக்கு செலுத்தும் ஒரு அஞ்சலியாகும். இந்த நாடகம் பாரம்பரிய நடனம், நாடக நடிப்பு, சடங்குப் பாடல்கள், கதை சொல்லல் மற்றும் நவீன அசைவுகள் ஆகியவற்றின் கலவை. இது, செவ்வியல் நடன ஆர்வலர்கள் மற்றும் இன்றைய தலைமுறை ரசிகர்கள் என அனைவரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது,'' என்றார். இந்த நாட்டிய நாடகத்தை பார்க்க, 1,000 ரூபாய், 750 ரூபாய், மாணவர்களுக்கு 250 ரூபாய் என, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
12-Aug-2025