உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுப்ரமணிய சுவாமி கோவிலில் நாள ை சூரசம்ஹார விழா

சுப்ரமணிய சுவாமி கோவிலில் நாள ை சூரசம்ஹார விழா

பொள்ளாச்சி; பொள்ளாச்சிசுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி சூரசம்ஹார விழா நாளை துவங்குகிறது.பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு சூரசம்ஹாரத்திருவிழா நாளை மாலை, 5:30 மணிக்கு, விநாயகர் பூஜை, அனுக்ஞை, வாஸ்துசாந்தி உள்ளிட்ட பூஜைகளுடன் துவங்குகிறது. வரும், 2ம் தேதி காலை, 10:00 மணிக்கு கந்தசஷ்டி உற்சவம், காப்புக்கட்டு நிகழ்ச்சி நடக்கிறது. 8ம் தேதி வரை நான்கு கால அபிேஷக ஆராதனைகள் நடக்கின்றன.வரும், 6ம் தேதி மாலை, 6:00 மணிக்கு வேல்வாங்கும் உற்சவ நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 7ம் தேதி மாலை, 4:30 மணிக்கு சூரசம்ஹாரமும்; 8ம் தேதி காலை, 10:00 மணிக்கு மஹா அபிேஷகம், மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்வசம் நடக்கிறது. வரும், 9ம் தேதி மாலை, 6:00 மணிக்கு திருஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ