மேலும் செய்திகள்
பெரியநாயக்கன்பாளையத்தில் மண் பரிசோதனை முகாம்
21-Oct-2025
பெ.நா.பாளையம்: தேசிய மாணவர் படையினர் 'தூய்மை இந்தியா' திட்டத்தில் பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலைய வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இப்பணியில் பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணன் வித்யாலயா சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி, பிரஸ் காலனி தம்பு மேல்நிலைப்பள்ளி, பெரியநாயக்கன்பாளையம் ரங்கசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி, மேட்டுப்பாளையம் மகாஜன மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரோ மேல்நிலைப்பள்ளி என்.சி.சி., மாணவர்கள், 200 பேர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் சுவாமி சிவானந்தா மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கதிர்வேல், தம்பு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ், ரங்கசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்து, தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில், என்.சி.சி.,யை சேர்ந்த ஜே.சி.ஓ., முகேஷ், ஜெய்சங்கர், மாரிராஜ் ஆகியோர் மாணவர்களை வழி நடத்தினர். பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையத்தின் முன்புறமுள்ள புதர்கள் அகற்றப்பட்டன. கமாண்டிங் அதிகாரி மோகித் சவுகான் வழிகாட்டுதலின் பேரில் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை என்.சி.சி., அலுவலர்கள் கார்த்திகேயன், குணசேகரன், சின்னப்பராஜ், தேவதாஸ், கீதாஞ்சலி ஆகியோர் செய்து இருந்தனர்.
21-Oct-2025