கரிமோட்டார் ஸ்பீடுவேயில் தேசிய கார் சாம்பியன் பந்தயம்
போத்தனூர், ; கோவையில் ஜே.கே.டயர் 28வது தேசிய கார் சாம்பியன் போட்டி நடந்தது. கோவை, செட்டிபாளையத்திலுள்ள கரி மோட்டார் ஸ்பீடு வேயில் நடந்த கார்களுக்கான நோவிஸ் கோப்பை பிரிவின் முதல் போட்டியில், புவன் போனு, அபிஜித், ஓஜாஸ் சர்வே ஆகியோரும் இரண்டாவது போட்டியில் புவன் போனு, ஓஜாஸ் சர்வே, பார்த்திக் அசோக் ஆகியோரும், மூன்றாம் போட்டியில் புவன் போனு, பார்த்திக் அசோக், லோகி திங்கேஷ் ரவி ஆகியோரும் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜி.டி. கோப்பை பிரிவின் முதல் போட்டியில், அனிஷ் ஷெட்டி, கயன் ஜுபின்பட்டேல், ஆஷிஷ் பட்டேல் ஆகியோரும், இரண்டாம் போட்டியில் அனிஷ்ஷெட்டி, கயன் ஜுபின் பட்டேல், நவனிக்குமார் ஆகியோர் முறையே, முதல் மூன்று இடங்களை பிடித்தனர். மூன்றாம் போட்டியில் அனிஷ் ஷெட்டி, நவனீத் குமார், கயன் ஜுபின் பட்டேல் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை வழங்கப்பட்டது. வரும், 16, 17, தேதிகளில் மீண்டும் போட்டிகள் நடக்கவுள்ளன.