உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யு.ஐ.டி., கல்லூரியில் தேசிய செஸ் போட்டி

யு.ஐ.டி., கல்லூரியில் தேசிய செஸ் போட்டி

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள யுனைடெட் கல்வி நிறுவனத்தில் தேசியசெஸ் போட்டிகள் துவங்கின.இக்கல்வி நிறுவனமும், கோவை மாவட்ட செஸ் சங்கமும் இணைந்து, தேசிய அளவிலான சதுரங்க போட்டியை, 5 நாட்கள் தொடர்ந்து நடத்துகிறது. இந்த போட்டியில் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, அந்தமான் நிக்கோபார் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 281 செஸ் விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர். போட்டியை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார் துவக்கி வைத்தார். துவக்க விழா நிகழ்ச்சியில், சர்வதேச ஆர்பிட்டார் விஜயராகவன், கோவை மாவட்ட செஸ் சங்க துணை தலைவர் அனந்த் ராம், தலைவர் செந்தில் சின்னசாமி, செயலாளர் தனசேகர், யுனைடெட் கல்வி நிறுவனங்களின் தலைவர் சண்முகம், இணைத்தலைவர் மைதிலி சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இப்போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு, 4 லட்சம் ரூபாய் பரிசு தொகை மற்றும் கோப்பைகள் வழங்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ