மேலும் செய்திகள்
பள்ளியில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு போட்டிகள்
18-Nov-2024
பொள்ளாச்சி, ; பொள்ளாச்சியில், தேசிய நுகர்வோர் தினத்தையொட்டி மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெற்றன.பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில், தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு, நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது.அதன் ஒரு கட்டமாக, பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில், தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு போட்டி நடந்தது. தாசில்தார் மேரி வினிதா, தனி தாசில்தார் (குடிமைப்பொருள்) சங்கீதா, பொள்ளாச்சி நுகர்வோர் சங்க தலைவர் இந்திராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி, சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி மாணவர்கள், கட்டுரை, கவிதை, ஓவியப்போட்டிகளில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
18-Nov-2024