உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய அடையாள அட்டை; பதிவு செய்ய அழைப்பு

தேசிய அடையாள அட்டை; பதிவு செய்ய அழைப்பு

அன்னுார்; நலத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது. அன்னுார் வட்டார வேளாண் உதவி இயக்குனர் பிந்து வெளியிட்டுள்ள அறிக்கை: விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டங்களில் பயன்பெற ஒவ்வொரு முறையும் ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டி உள்ளது. இதை தவிர்க்கும் விதமாக, மின்னணு முறையில் அனைத்து விவரங்களையும் சேகரிக்க தமிழ்நாட்டில் வேளாண் அடுக்கு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதற்கு விவசாயிகள் ஆதார் எண், மொபைல் எண், நில உடமை விபரங்களை தெரிவிக்க வேண்டும். பொது சேவை மையத்தில் இந்த விவரங்களை தெரிவித்தால் தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண் ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படுத்தப்படும்.இதன் வாயிலாக மட்டுமே மத்திய அரசின் பிரதம மந்திரி கவுரவ நிதியான ஆண்டுக்கு 6,000 ரூபாய் பெற முடியும். எனவே, வரும் 15-ம்தேதிக்குள் விவரங்களை தெரிவித்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !