தேசிய அளவிலான தடகள போட்டி; பதக்கங்கள் குவித்த வீராங்கனைகள்
கோவை; ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான தடகள போட்டியில் கோவை வீராங்கனைகள் பதக்கங்கள் குவித்து பெருமை சேர்த்துள்ளனர்.ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் பள்ளிகளுக்கு இடையே தேசிய அளவிலான தடகள போட்டிகள் சமீபத்தில் நடந்தது. இதில், 19 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் கோவையை சேர்ந்த தியா, 100 மீ., 200 மீ., மற்றும் 400 மீ., தொடர் ஓட்டத்தில் தங்க பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார். நேத்ரா, 100 மீ., ஓட்டத்தில் வெண்கல பதக்கமும், 400 மீ., தொடர் ஓட்டத்தில் தங்கமும் வென்றுள்ளார். மேலும், நிவேதா, 1,600 மீ., தொடர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்றார்.கோவை மாவட்டத்தை சேர்ந்த மாணவியர் மூவர் தங்க பதக்கங்கள் பெறுவது இதுவே முதல் முறை. மாணவியரை பயிற்சியாளர் வேல்முருகன், பெற்றோர், சக மாணவியர் பாராட்டினர்.