தினமலர் - பட்டம் மெகா வினாடி- வினா போட்டி பதிலளித்து அசத்திய நேஷனல் மாடல் மாணவர்கள்
கோவை: 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் நடந்த 'பதில் சொல்; பரிசை வெல்' வினாடி-வினா போட்டியில் மாணவ, மாணவியர் அசத்தலான பதில் அளித்தனர்.'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில் மாணவர்களிடம் கற்றல் சார்ந்த தேடலை விரிவுபடுத்தவும், தேர்வுக்கு உற்சாகப்படுத்தும் விதமாகவும் 2018ம் ஆண்டு முதல் 'வினாடி-வினா' போட்டி நடத்தப்பட்டு வருகிறது.இந்தாண்டுக்கான 'வினாடி வினா விருது, 2024-25' போட்டி, 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் கடந்தாண்டு அக்., 8ம் தேதி துவங்கியது. எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது.'கோ-ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சிஸ் உள்ளது. 150க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. பள்ளியளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு, அரையிறுதி போட்டி நடக்கும். இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு இறுதிப்போட்டி நடத்தப்படும்.* பீளமேடு, நேஷனல் மாடல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த வினாடி-வினா போட்டியில், 700 பேர் தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு எழுதினர்.அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டியில், 'இ' அணியை சேர்ந்த, 9ம் வகுப்பு மாணவி வைஷ்ணவி, எட்டாம் வகுப்பு மாணவர் கவுசியன் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி முதல்வர் பேபி பரிசுகள் வழங்கினார். தமிழ் ஆசிரியர்கள் ராம்குமார், சரஸ்வதி, ஒருங்கிணைப்பாளர் வனிதா ஆகியோர் உடனிருந்தனர்.* நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியில், 465 பேர் தகுதிச்சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு எழுதினர். போட்டியின் நிறைவில், 'ஜி' அணியை சேர்ந்த, எட்டாம் வகுப்பு மாணவர் மீனாட்சி சுந்தரம், மாணவி தர்ஷிதா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.வெற்றி பெற்றவர்களுக்கு, துணை முதல்வர் லாவண்யா பரிசுகள் வழங்கினார். தமிழ் ஆசிரியர்கள் மதன் பாரத், விஜயலட்சுமி, ராஜேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.