உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / செயற்கை நுண்ணறிவு தேசிய கருத்தரங்கு

செயற்கை நுண்ணறிவு தேசிய கருத்தரங்கு

கோவை:நவக்கரை, தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லுாரியில், 'செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் மற்றும் கம்யூட்டிங் ஆற்றல்' என்ற தலைப்பில், தேசியக் கருத்தரங்கு நடந்தது. எதிர்கால தொழில்நுட்பங்களை வடிவமைப்பதில் செயற்கை நுண்ணறிவின் வளர்ந்து வரும் ஏ.ஐ., தாக்கத்தை வல்லுனர்கள் விளக்கினர். பல்வேறு தொழில்நுட்ப அமர்வுகளில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில் வல்லுனர்களை இணைப்பதற்கும், நெட்வொர்க்கிங் செய்வதற்கும், இந்த மாநாடு வாய்ப்புகளை உருவாக்கியது. கல்லுாரியின் செயலாளர் நீலராஜ், இயக்குனர் வினோத், முதல்வர் ஜெகதீசன், கல்வித் துறையின் டீன் பாகீரதி மற்றும் சென்னை என்.ஐ.டி.டி.டி.ஆர்., துறையின் மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல் பேராசிரியர் மற்றும் தலைவர் குழந்தைவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை