உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய சிலம்பம் போட்டி; பதக்கங்கள் குவித்த கற்பகம்

தேசிய சிலம்பம் போட்டி; பதக்கங்கள் குவித்த கற்பகம்

கோவை; தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில், கற்பகம் பல்கலை வீரர், வீராங்கனைகள், 31 பதக்கங்கள் வென்றுள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் அகில இந்திய சிலம்பம் சம்மேளனம், தமிழ்நாடு மற்றும் கன்னியாகுமரி மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கம் சார்பில், முதலாவது தேசிய அளவிலான சிலம்பம் போட்டி, இரு நாட்கள் நடந்தது.இதில், சப் ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் நாட்டின், 22 மாநிலங்களில் இருந்து, 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.கோவை, கற்பகம் பல்கலையை சேர்ந்த மாணவ, மாணவியர், 28 தங்கப் பதக்கம், மூன்று வெண்கலம் உட்பட, 31 பதக்கங்கள் வென்றனர்.ஆண்களுக்கான கம்பு வீச்சு பிரிவில் கவுதமகிருஷ்ணன், அலங்கார வீச்சு பிரிவில் சசிதரன், வேல் கம்பு வீச்சு பிரிவில் கோகுல்ராஜ், ஒற்றை வாள் வீச்சு பிரிவில் லிலதரன், ஒற்றை சுருள்வாள் வீச்சு பிரிவில் விஜய சந்தோஷ், இரட்டைக் கம்பு வீச்சு பிரிவில், முத்துப்பாண்டி பதக்கங்கள் குவித்தனர்.பெண்களுக்கான அலங்கார வீச்சு பிரிவில் பிரசீலா ஏஞ்சல், ஒற்றை வாள் வீச்சு பிரிவில் மரியரீட்ட, இரட்டை சுருள் வாள் வீச்சு பிரிவில் ராஜம், மான் கொம்பு வீச்சு பிரிவில் ரமணி, கம்பு சண்டை போட்டி, 45 கிலோ எடை பிரிவில் பிரசீலா ஏஞ்சல், 50 கிலோ எடை பிரிவில் ராஜம், 65 கிலோ எடை பிரிவில், மரியரீட்ட உள்ளிட்டோர் பதக்கங்கள் வென்றனர்.வெற்றி பெற்ற வீரர்களுக்கு, கற்பகம் பல்கலை தாளாளர் வசந்தகுமார், முதன்மையர் முருகையா, துணைவேந்தர் வெங்கடாஜலபதி, உடற்கல்வி இயக்குனர் சுதாகர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி