உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு தொடக்கப்பள்ளியில் தேசிய விண்வெளி தினம்

அரசு தொடக்கப்பள்ளியில் தேசிய விண்வெளி தினம்

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி அருகே, கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் தினகரன் கூறியதாவது: பள்ளி பருவத்தில் மாணவர்களிடம் அறிவியல் ஆர்வம், சிந்திக்கும் மனப்பான்மை ஆகியவற்றை வளர்க்கும் விதமாக, நெருப்பில் அறுந்து விழாத காயினுடன் உள்ள நுால், காற்றில் அழுத்தம் குறித்த பாட்டில் சோதனை, உப்பு நீரில் முட்டை மிதத்தல், சூரிய ஒளி ஒரே புள்ளியில் குவிப்பதால் நெருப்பு ஏற்படுத்துதல், எலுமிச்சை பழத்தில் மின்னுாட்டம் ஏற்படுத்துதல் போன்ற எளிய அறிவியல் சோதனைகள் பள்ளியில் வாரந்தோறும் நடத்தப்படுகின்றன. இதன் வாயிலாக மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்க முடிகிறது. இதன் தொடர்ச்சியாக, தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்பட்டது. அதில், 2008, 2019, 2023ல் மூன்றாவது முறையாக அனுப்பப்பட்ட ரோவர், லேண்டர் வெற்றிகரமாக சந்திரனின் தென் துருவத்தில் இறங்கி, எட்டு மீட்டர் நகர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டது குறித்து விளக்கப்பட்டது. லேண்டர் இறங்கிய இடத்துக்கு ஸ்டேஷியா சிவசக்தி என பெயரிடப்பட்டது மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை