உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய வாலிபால் போட்டி; விவேகம் பள்ளி மாணவி தேர்வு

தேசிய வாலிபால் போட்டி; விவேகம் பள்ளி மாணவி தேர்வு

பெ.நா.பாளையம்; தேசிய அளவிலான வாலிபால் போட்டியில் பங்கேற்க பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள விவேகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் நடத்தும் தேசிய அளவிலான வாலிபால் போட்டி மத்திய பிரதேசம் நரசிங்கப்பூரில் நடைபெற உள்ளது. இதில் தமிழக அணி சார்பில், 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில், விவேகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 10ம் வகுப்பு மாணவி சாதனா, விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்போட்டிக்கு கோவை மாவட்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள ஒரே மாணவி சாதனா என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு வீரபாண்டி பிரிவில் உள்ள விவேகம் பள்ளியின் தாளாளர், முதன்மை முதல்வர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !