மேலும் செய்திகள்
நாட்டு நலப்பணி திட்ட முகாம்
28-Sep-2026
ஆனைமலை: கோட்டூர் மலையாண்டிப்பட்டணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டுநலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடந்தது. மாணவர்கள், ஊராட்சி ஒன்றிய உருது பள்ளி வளாக துாய்மைபணி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சுவருக்கு வெள்ளையடித்தல், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றி பராமரித்தனர். தென்சங்கம்பாளையம் மலைச்சாரல் உண்டு உறைவிடப்பள்ளியில், புதர் அகற்றி, கழிப்பிடம், குளியலறைக்கான பாதையை சீரமைத்தனர். ஆழியாறு அறிவுத்திருக்கோவிலில், தியான பயிற்சிகள் வழங்கப்பட்டன. தலைமையாசிரியர் கவுரிநாயகி, முன்னாள் மாணவர் மன்றத்தினர், திட்ட அலுவலர் செந்தில்குமார் ஒருங்கிணைத்தனர்.
28-Sep-2026