உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய வீல் சேர் கூடைப்பந்து; புதுச்சேரி, தெலுங்கானா தகுதி

தேசிய வீல் சேர் கூடைப்பந்து; புதுச்சேரி, தெலுங்கானா தகுதி

கோவை; இந்திய சக்கர நாற்காலி கூடைப்பந்து கூட்டமைப்பு சார்பில், தென் மண்டல வீல் சேர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி, நேரு ஸ்டேடியம் எதிரே கூடைப்பந்து அரங்கில் நேற்று நடந்தது. பெண்கள் பிரிவில், கேரளா, புதுச்சேரி என இரு அணிகள் விளையாடின. ஆண்கள் பிரிவில், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய அணிகள் பங்கேற்றன. பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த பெண்களுக்கான இறுதிப்போட்டியில் கேரள அணியும், புதுச்சேரி அணியும் மோதின. இரு அணி வீராங்கனைகளும், அபார திறமையை வெளிப்படுத்தினர். இறுதியில், 18-8 என்ற புள்ளிக்கணக்கில், புதுச்சேரி அணி வெற்றி பெற்றது. ஆண்கள் பிரிவில், தெலுங்கானா அணியும், புதுச்சேரி அணியும் மோதின. இதில், 44-28 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கானா அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற இரு அணிகளும், மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் அடுத்த மாதம், 1 முதல், 10ம் தேதி வரை நடக்கும் தேசிய போட்டிக்கு தகுதிபெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு, கூட்டமைப்பின் தொழில்நுட்ப கமிஷனர் பத்மநாபன் உள்ளிட்டோர் பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி