உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இயற்கை இடுபொருள் தயாரிப்பு: விவசாயிகளுக்கு இலவசப் பயிற்சி

இயற்கை இடுபொருள் தயாரிப்பு: விவசாயிகளுக்கு இலவசப் பயிற்சி

- நமது நிருபர் -இன்றைய நவீன விவசாயத்தில் களைக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லிகள் அதிக அளவில் தெளிக்கப்படுவதால் உணவு விஷத்தன்மையுடையதாக மாறி வருகிறது. பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. இயற்கை முறையில் காய்கறி பயிர் சாகுபடி செய்ய தற்போது விவசாயிகளிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது. பொங்கலுார் ஒன்றியம், கண்டியன்கோவில் அருகே உள்ள சுப்பே கவுண்டம்பாளையத்தில், விவசாயி தெய்வசிகாமணி தோட்டத்தில் இயற்கை இடுபொருள் தயாரிப்பு குறித்த இலவச பயிற்சி நடந்தது. நாட்டு மாட்டுச்சாணத்தை பயன்படுத்தி வளர்ச்சி ஊக்கி, உரம் தயாரித்தல், இயற்கை பூச்சி விரட்டி தயாரித்தல் குறித்த இலவச பயிற்சி நடந்தது. நாமக்கல்லைச்சேர்ந்த 'தக்காளி' ராமன் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு நாட்டு விதைகள் இலவசமாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை