மேலும் செய்திகள்
நவராத்திரி கொண்டாட்டம் விழா ஏற்பாடுகள் தீவிரம்
14-Sep-2025
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே சாமநாயக்கன்பாளையத்தில் உள்ள மகாலட்சுமி, சிறு காளியம்மன் கோவிலில் நவராத்திரி விழா இம்மாதம், 21ம் தேதி துவங்குகிறது. 22ம் தேதி முதல் அக்.1ம் தேதி வரை தினசரி மாலை, 6:30 மணிக்கு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. அக். 1ம் தேதி மாலை, 4:00 மணிக்கு விஜயதசமி நாளில் வெள்ளி விநாயகர், கல்யாண சுப்பிரமணியர் கோவிலிலிருந்து மேள தாளங்களோடு தீர்த்த குடங்கள் மகாலட்சுமி மற்றும் சிறுகாளியம்மன் கோவிலுக்கு ஊர்வலம் வருகிறது. தொடர்ந்து, மகிஷாசுரனை வதம் செய்யும் விழாவும், அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நவராத்திரி குழுவினர் செய்து வருகின்றனர்.
14-Sep-2025