உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா

ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா

நெகமம்; நெகமம், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரி விழா இன்று துவங்கி அக்.,4ம் தேதி வரை நடக்கிறது. பொள்ளாச்சி அருகே நெகமத்தில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நவராத்திரி விழா நிகழ்ச்சிகள் இன்று (22ம் தேதி) துவங்குகிறது. கணபதி ஹோமம் மற்றும் அழகு சேர்வை செய்து, சக்தி அழைத்து கொலு துவங்கும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், நடைபெறுகிறது. வரும் 26ம் தேதி, மாலை 6:00 மணிக்கு, திருவிளக்கு வழிபாட்டு பூஜைகள் நடக்கிறது. அக்டோபர், 1ம் தேதி, இரவு 8:00 மணிக்கு, சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நடக்கிறது. 2ம் தேதி, காலை 8:00 மணிக்கு, சக்தி அழைத்தல் மற்றும் முளைப்பாரி எடுக்கும் நிகழ்வு நடக்கிறது. மதியம் 1:00 மணிக்கு, மாவிளக்கு பூஜை, ராகு தீப பூஜை நடக்கிறது. இரவு 9:00 மணிக்கு, அன்பு சேர்வை, அம்மன் திருவீதி உலா நடக்கிறது. 4ம் தேதி, காலை 9:00 மணிக்கு, சுவாமி திருக்கல்யாணம் மற்றும் அன்னதானம் நடக்கிறது. விழாவில், நெகமம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !