உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நவபாரத் பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி

நவபாரத் பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி

அன்னூர்; சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில் அன்னூர் நவபாரத் நேஷனல் பள்ளி, பத்து மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இப்பள்ளியில், பிளஸ் 2 தேர்வில், மாணவி லலித வர்ஷினி 489, மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். ஆங்கிலம் 95, கணக்கியல் 99, பொருளியல் 98, வணிகவியல் 99, கணிதம் 98, மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.எட்வின் தேவ சகாயம் 487 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இவர் ஆங்கிலம் 96, இயற்பியல் 95, வேதியியல் 98, உயிரியல் 98, கணிதம் 100, மதிப்பெண் பெற்றார். சமிக்சா 483 மதிப்பெண்கள் பெற்று, மூன்றாம் இடம் பிடித்தார்.சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வில், நவநீத் 495 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இவர் ஆங்கிலம் 98, தமிழ் 100, கணிதம் 98, அறிவியல் 100, சமூக அறிவியல் 98, மதிப்பெண்கள் பெற்றுள்ளார். விசாகன் 491, காவிய ஸ்ரீ 490, மதிப்பெண்கள் பெற்று முறையே, இரண்டாம், மூன்றாம் இடம் பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை