உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நவபாரத் பள்ளி நீட் தேர்வில் அசத்தல்

நவபாரத் பள்ளி நீட் தேர்வில் அசத்தல்

அன்னுார்; 'நீட்' தேர்வில், அன்னுார் நவபாரத் நேஷனல் பள்ளி மாணவர், 592 மதிப்பெண் பெற்றுள்ளார்.அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில், இளநிலை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கைக்கு 'நீட்' தேர்வு ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான 'நீட்' தேர்வு முடிவுகள் கடந்த 14ம் தேதி வெளியானது.இதில், அன்னுார், நவபாரத் நேஷனல் பள்ளி மாணவர் எட்வின் தேவ சகாயம் 720க்கு 592 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர் அகில இந்திய அளவில் 1962வது இடம் பிடித்துள்ளார்.இந்த மாணவர். ஏற்கனவே சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு தேர்வில் இப்பள்ளியில் முதலிடம் பெற்றார்.முதல் முறை 'நீட்' தேர்வு எழுதி, 592 மதிப்பெண் பெற்ற மாணவருக்கு, பள்ளி அறங்காவலர்கள், ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி