டில்லியில் என்.சி.சி., முகாம்; பங்கேற்றவர்களுக்கு பாராட்டு
கோவை : டில்லியில் நடந்த தல்சயனிக் முகாமில், பங்கேற்ற கோவை அரசு கலைக் கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.தேசிய மாணவர் படை சார்பில் ஆண்டுதோறும், தமிழ்நாடு புதுச்சேரி அந்தமான் நீக்கோபர் டைரக்டிரேட் சார்பில் சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கு டில்லியில் நடக்கும் சிறப்பு முகாமில் பயிற்சி அளிக்கப்படும். அதன்படி, கோவை அரசுக் கலைக்கல்லூரி, 4 டி.என்., பட்டாலியன் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த தமிழ் துறை மாணவி வெண்ணிலா மற்றும் மாணவர் நாகராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இருவரும் டில்லியில் நடந்த தல்சயனிக் முகாம் - 2024ல் பங்கேற்றனர். பயிற்சி முடிந்து திரும்பிய மாணவர்கள் இருவரையும், கல்லூரி முதல்வர் எழிலி, துணை முதல்வர் முனைவர் கனகராஜ், 4 டி.என்., பட்டாலியன் தேசிய மாணவர் படை பொறுப்பாளர் லோகமணி ஆகியோர் பாராட்டினர்.