உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பை கொட்டுவதில் அலட்சியம்! விழிப்புணர்வு ஏற்படுத்துமா பேரூராட்சி

குப்பை கொட்டுவதில் அலட்சியம்! விழிப்புணர்வு ஏற்படுத்துமா பேரூராட்சி

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.கிணத்துக்கடவு பேரூராட்சியில், 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். பேரூராட்சி பகுதியில் நாள்தோறும் தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று குப்பையை சேகரித்து வருகின்றனர்.ஆனால், ஒரு சிலர் குப்பையை முறையாக வழங்காமல் வீடுகளின் முன்பாக உள்ள, கழிவு நீர் கால்வாயில் கொட்டி செல்கின்றனர். இதனால், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் அங்கேயே தேங்கி நிற்பதுடன், கடும் துர்நாற்றம் வீசுகிறது. அருகில் குடியிருப்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.மேலும், கொசு தொல்லையும் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை அகற்றம் குறித்து முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'குடியிருப்பு பகுதியில் உள்ள குப்பையை சேகரிக்க தினம்தோறும் தூய்மை பணியாளர்கள் வந்து செல்கின்றனர். இது மட்டும் இன்றி குப்பையை கொட்ட பொது இடங்களில் குப்பைத் தொட்டு வைக்கப்பட்டுள்ளது.இதைத் தவிர்த்து, பொதுமக்கள் சிலர் கால்வாயில் குப்பையை கொட்டுவதால், கழிவுநீர் தேங்குகிறது. கழிவை அகற்றம் செய்தால் மீண்டும் இதே தவறை செய்கின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை