உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போஸ்ட் ஆபீசில் நெட்ஒர்க் பிரச்னை

போஸ்ட் ஆபீசில் நெட்ஒர்க் பிரச்னை

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, போஸ்ட் ஆபீசில் 'நெட்ஒர்க்' பிரச்னையால் பல்வேறு பணிகள் பாதித்ததால், மக்கள் அதிருப்தியடைந்தனர்.கிணத்துக்கடவு போஸ்ட் ஆபீசில், போஸ்டல் வங்கி கணக்கு, ஆதார் சேவை, காப்பீடு மற்றும் பிற சேவைகள் உள்ளது. இந்நிலையில், நேற்று 'நெட்ஒர்க்' பிரச்னையால் போஸ்ட் ஆபீஸ் வந்த மக்கள் பணம் செலுத்த முடியாமலும், பிற சேவையை பயன்படுத்த முடியாமலும் திரும்பிச் சென்றனர்.மக்கள் கூறியதாவது:கிணத்துக்கடவு போஸ்ட் ஆபீஸ் முதல் தளத்தில் உள்ளது. இங்கு அடிக்கடி 'நெட்ஒர்க்' பிரச்னை ஏற்படுவதால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், வயதானவர்கள் மாடி படி ஏறி, இறங்க மிகவும் சிரமப்படுகின்றனர்.பணம் டெபாசிட் செய்ய போஸ்ட் ஆபீஸ் வந்தால் 'நெட்ஒர்க்' பிரச்னை காரணமாக திருப்பி செல்ல வேண்டியுள்ளது. தடங்கல் இல்லாமல் சீரான இணைய சேவை இருந்தால் பிரச்னை ஏற்பட வாய்ப்பு இல்லை.மேலும், போஸ்ட் ஆபீஸ் வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும். அப்போது தான், மக்கள் எளிதாக சென்று வர முடியும்.இப்பிரச்னைக்கு தீர்வு காண பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், போஸ்டல் வங்கி சேவையை பயன்படுத்த மக்கள் முன்வருவார்கள்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை