ஆதரவற்றோருக்கு புத்தாடை
போத்தனூர்: கோவை, குறிச்சியில் செயல்பட்டு வரும் அமுதம் அமைப்பு சார்பில், கடந்த நான்காண்டுகளாக சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு, தீபாவளி பண்டிகை முன்னிட்டு புத்தாடை வழங்கப்பட்டு வருகிறது. ஐந்தாவது ஆண்டாக நேற்று இந்த அமைப்பு சார்பில் ஈச்சனாரி ஊர் பகுதி, சிட்கோ, மதுக்கரை மார்க்கெட் சாலை மேம்பாலங்களின் கீழே வசிக்கும், 150 பேருக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டது. அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோபி, பாஸ்கர் உள்ளிட்டோர் வழங்கினர்.