உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை பாரதியார் பல்கலையில் புதிய பொறுப்புக்குழு தயாராகிறது

கோவை பாரதியார் பல்கலையில் புதிய பொறுப்புக்குழு தயாராகிறது

கோவை; துணைவேந்தர் பொறுப்புக்குழுவை ஏற்படுத்த, தேவையான நடவடிக்கைகளை பாரதியார் பல்கலை துவங்கியுள்ளது.பாரதியார் பல்கலையில், 2022 அக்., முதல் துணைவேந்தர் பணியிடம் காலியாகவுள்ளது. துணைவேந்தர் இல்லாததால், அவரது பணிகளை கவனிக்க நான்கு பேர் கொண்ட துணைவேந்தர் பொறுப்புக்குழு நியமிக்கப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=e0t43g16&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இக்குழுவினரின் பணிக்காலம் மே, 30ம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது உயர்கல்வித்துறை செயலாளர் சமயமூர்த்தி மட்டுமே பொறுப்புக்குழுவில் உள்ளார். பல்கலையில், தற்போது துணைவேந்தரும் இல்லை; துணைவேந்தர் பொறுப்புக்குழுவும் இல்லை.இதையடுத்து, புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை, மீண்டும் ஒரு துணைவேந்தர் பொறுப்புக்குழுவை நியமிக்க தேவையான நடவடிக்கைகளை, பல்கலை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ