உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு புதிய அலுவலக கட்டடம் தயார்

மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு புதிய அலுவலக கட்டடம் தயார்

- நமது நிருபர் -மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு, பல்லடத்தில் புதிய அலுவலக கட்டடம் கட்டப்பட்டு, திறப்பு விழா காண தயார் நிலையில் உள்ளது.தொழிற்சாலைகள் தொழில் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என, வகைப்படுத்தும் பணிகளுக்காக, சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் கீழ், மாசு கட்டுப்பாட்டு வாரியம் இயங்கி வருகிறது.திருப்பூரில் இயங்கி வந்த மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம், நிர்வாக சிக்கல்களை தவிர்க்கும் வகையில், கடந்த, 2013ம் ஆண்டு, திருப்பூர் வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.பல்லடம், உடுமலை, தாராபுரம் பகுதிகளை உள்ளடக்கிய திருப்பூர் தெற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம், பல்லடம் -- பொள்ளாச்சி செல்லும் பழைய பைபாஸ் ரோட்டில் உள்ளது.திருப்பூர் தெற்கு அலுவலகம் பிரிக்கப்பட்டது முதல், பல்லடத்தில் உள்ள வாடகை கட்டடத்தில் தான் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இயங்கி வருகிறது.இதற்கு, புதிதாக கட்டடம் கட்ட திட்டமிடப்பட்ட நிலையில், பல்லடத்தை அடுத்த பெரும்பாளி பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு, ஓராண்டுக்கு முன் கட்டுமான பணிகள் துவங்கின.கட்டுமான பணிகள் நிறைவடைய உள்ளதை தொடர்ந்து, கட்டடம் திறப்பு விழா காண தயாராக உள்ளது. விரைவில், திறப்பு விழா செய்யப்பட்டு, திருப்பூர் தெற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய அலுவலகம், மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி