மேலும் செய்திகள்
'ஏ.ஐ., எதிர்காலம் அல்ல இதுவே நிகழ்காலம்'
04-May-2025
கோவை; எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக் கல்லுாரியின் இயந்திரவியல் துறை சார்பில், கோவை நிறுவனத்தின் மேக்கட்ரானிக்ஸ் ஆய்வகத்தில், ஏ.ஐ.சி.டி.இ., நிதியுதவியுடன் புதிய ஆராய்ச்சி மேம்பாட்டுத் திட்டம் துவக்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற போஷ் குளோபல் சாப்ட்வேர் நிறுவனத்தின் முதன்மை பொறியாளர் அஜித் சசிதரன், 'வெப்பப் பயன்பாடுகளுக்கான ரோபோ கை வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்' என்ற புதிய திட்டத்தை துவக்கி வைத்தார்.'தொழில்நுட்த்துடன் வளருங்கள்' என மாணவர்களைக் கேட்டுக்கொண்ட அவர், மாணவர்களும், ஆராய்ச்சியாளர்களும் புதிய தொழில்நுட்பங்கள் வாயிலாக, இயந்திரவியல் உலகில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார்.எஸ்.என்.எஸ்., கல்லுாரிகளின் தாளாளர் ராஜலட்சுமி, தொழில்நுட்ப இயக்குனர் நளின், இயக்குனர் அருணாசலம், முதல்வர்கள் செந்துார் பாண்டியன் மற்றும் சார்லஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
04-May-2025