மேலும் செய்திகள்
வாரச்சந்தையில் ஆடுகள் ரூ.50 லட்சத்திற்கு விற்பனை
14-Apr-2025
வால்பாறை, ;புதிய சம்பள பேச்சு வார்த்தையை உடனே துவங்க வேண்டும் என, ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில், கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி, சேலம், தேனி ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கான சம்பள ஒப்பந்தம் வரும், ஜூன் மாதம், 30ம் தேதி நிறைவடைகிறது.இந்நிலையில், இது குறித்து வால்பாறை ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்க பொதுசெயலாளர் மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள ஒப்பந்தம், ஜூன் மாதம் நிறைவடையும் நிலையில், அதற்கு முன்னதாக புதிய சம்பள பேச்சு வார்த்தை துவங்க வேண்டும். புதிய சம்பள பேச்சு வார்த்தையில் விலைவாசிக்கேற்ப தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்க வேண்டும்.வறுமையில் வாடும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, ஜூலை 1ம் தேதி முதல் புதிய சம்பள ஒப்பந்தப்படி தினக்கூலி உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
14-Apr-2025