கோவை மாவட்டத்துக்கு புதிய விளையாட்டு அலுவலர்
கோவை; கோவை மாவட்ட விளையாட்டு அலுவலராக, புவனேஸ்வரி பொறுப்பேற்றுள்ளார்.கோவை மாவட்ட விளையாட்டு அலுவலராக, கடந்த நான்கு மாதங்களாக பணிபுரிந்து வந்த ஆனந்துக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மேலாளராக, பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதையடுத்து, பெரம்பலுார் மாவட்ட விளையாட்டு அலுவலராக(பொ) இருந்த புவனேஸ்வரி, கோவை மாவட்ட விளையாட்டு அலுவலராக, பொறுப்பேற்றுக்கொண்டார். நாமக்கல் மாவட்டத்தில், 12 ஆண்டுகள் கோ-கோ மற்றும் கபடி பயிற்சியாளராக, இவர் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.