உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புத்தாண்டு கொண்டாட்டம்; விடிய விடிய ரோந்து

புத்தாண்டு கொண்டாட்டம்; விடிய விடிய ரோந்து

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனப்பகுதியையொட்டி, ஊட்டி, கோத்தகிரி சாலையில் 30க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள் உள்ளன. இங்கு இரவு நேர புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, அதிக ஒலி, ஒளி எழுப்பும் கருவிகளை பயன்படுத்தக்கூடாது. பட்டாசு வெடிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இவற்றை யாராவது மீறுகின்றனரா என்று வனத்துறையினர் விடிய விடிய தீவிர ரோந்து மேற்கொண்டனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பாக காட்டேஜ், விடுதி போன்றவற்றின் உரிமையாளர்களுக்கு முன்கூட்டியே கட்டுப்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினோம் என்றார்.மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் உள்ள வியூ பாயிண்டிற்கு நேற்று முன் தினம் இரவு பலரும் புத்தாண்டு கொண்டாட படையெடுத்தனர். அவர்களை மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்ன காமணன், வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் வனத்துறை பணியாளர்கள், மேட்டுப்பாளையம் போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !