உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மருதமலை முருகன் கோவிலுக்கு புதுமண தம்பதி ஆட்டோ தானம்

மருதமலை முருகன் கோவிலுக்கு புதுமண தம்பதி ஆட்டோ தானம்

வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதிகள், கோவிலுக்கு எலக்ட்ரிக் ஆட்டோவை தானமாக வழங்கினர்.கோவை, கே.கே.புதூரை பூர்வீகமாக கொண்டவர் அன்பமுதன். இவர், ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்று தற்போது, அசாம் மாநிலத்தின் செயலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவருக்கும், அசாம் மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வரும், சினேகலதா குமாரி என்பவருக்கும், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பின், கோவில் பணிகளுக்காக, சுமார், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான எலக்ட்ரிக் ஆட்டோவை, கோவில் நிர்வாகத்திற்கு வழங்கினர். இதற்கான சாவியை, மணமக்கள், கோவில் துணை கமிஷனர் செந்தில்குமாரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை