மேலும் செய்திகள்
பஸ் ஸ்டாப்பில் நிற்காத பஸ்; வாக்குவாதம்
22-Jul-2025
கோவை; சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த சிலர், நேற்று முன்தினம் மினிபஸ்சில் கோவை வந்தனர். பின்னர் அவர்கள் கோவை மருதமலை, மாசாணியம்மன் கோவில்களில் சாமி தரிசனம் செய்து விட்டு, சேலம் திரும்பிக் கொண்டிருந்தனர். பஸ் அவிநாசி ரோடு சிட்ரா அருகே நள்ளிரவு 1:00 மணியளவில் சென்று கொண்டிருந்த போது, பஸ்சின் டயர் திடீரென வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் கவிழ்ந்தது. பஸ்சில் பயணம் செய்த, 27 பேர் உள்ளே சிக்கி கொண்டனர். அதில் ஒன்பது பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவ்வழியாக சென்றவர்கள், போலீசார் மற்றும் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். காயமடைந்த, 9 பேரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின் அவர்கள் வேறு பஸ்சில் சேலம் புறப்பட்டனர்.
22-Jul-2025