உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சாலையோர கிணற்றுச்சுவர் இடிந்து ஒரு மாதமாகியும் நடவடிக்கை இல்லை

 சாலையோர கிணற்றுச்சுவர் இடிந்து ஒரு மாதமாகியும் நடவடிக்கை இல்லை

அன்னூர்: சாலையோர கிணற்று சுவர் இடிந்து விழுந்து, கனரக வாகனங்கள் தடை செய்யப்பட்டு, ஒரு மாதமாகியும், நடவடிக்கை இல்லை. அன்னூர், சத்தி சாலையில், அல்லிகுளம் பிரிவில், சாலையோரத்தில் உள்ள ஒரு கிணற்றின் சுவர் இடிந்து விழுந்தது. இதையடுத்து அந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்வது தடை செய்யப்பட்டது. இதுகுறித்து அல்லிகுளம் மக்கள் கூறுகையில், 'ஒரு மாதத்திற்கு முன்பு கிணறு சுற்றுச்சுவர் இடிந்ததால் அல்லிகுளம் சாலையின் ஒரு பகுதி சேதமானது. ஆனால் கிணற்றிலிருந்து தண்ணீரை வெளியேற்றவும், கிணற்றை மூடவும் நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சி மற்றும் வருவாய் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தப் பாதையில் கனரக வாகனங்கள் இயக்க தடை விதித்தனர். ஒரு மாதம் ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லாததால், இந்த வழியில் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில்லை. பள்ளி, கல்லூரி பஸ்கள், விவசாய தோட்டங்களுக்கு விளை பொருள் ஏற்றிச் செல்ல வரும் லாரிகள் என எதுவும் செல்ல முடிவதில்லை. இந்தப் பகுதியில் அல்லிகுளம், தாச பாளையம், சாணாம் பாளையம் கட்டபொம்மன் நகர் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். ஒட்டியுள்ள வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. விரைவில் கிணற்றை மூடவும் சாலையை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ