உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேட்பு மனு தாக்கல் செய்ய யாரும் வரலை

வேட்பு மனு தாக்கல் செய்ய யாரும் வரலை

கோவை : கோவை லோக்சபா தொகுதிக்கு, வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கிய நிலையில், ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடமோ அல்லது, டவுன்ஹாலில் உள்ள மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில், மாநகராட்சி துணை கமிஷனரிடமோ, அரசு விடுமுறை இல்லாத நாட்களில், காலை, 11:00 முதல் மாலை, 3:00 மணிக்குள், 27ம் தேதிக்குள் வேட்பு மனு கொடுக்க வேண்டும். வேட்பு மனு விண்ணப்பங்களை, இந்த அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்' என கூறியுள்ளார்.இதன்படி, வேட்பு மனு பெறுவதற்காக, தேர்தல் நடத்தும் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார், தாசில்தார் மகேஷ்குமார் உட்பட தேர்தல் பிரிவு அலுவலர்கள், கலெக்டர் அலுவலகத்தில் காத்திருந்தனர். நேற்று ஒருவர் கூட, வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ