உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடியரசு தின விடுமுறை இல்லை: 155 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

குடியரசு தின விடுமுறை இல்லை: 155 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

கோவை; குடியரசு தினத்தில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல், முன்னனுமதி பெறாமல் இயங்கிய 155 நிறுவனங்கள் மீது, தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.கோவை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் காயத்ரி வெளியிட்டுள்ள அறிக்கை:ஜன., 26, மே 1, ஆக., 15, அக்., 2 ஆகிய தேதிகள் மற்றும் குறைந்தது ஐந்து பண்டிகை நாட்கள் என மொத்தம் 9 விடுமுறை தினங்களில், சம்பளத்துடன் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும். மேற்கண்ட நாட்களில் தொழிலாளர்கள் பணிபுரிய, தொழிலாளர் ஒப்புதல் பெற்று, தொழிலாளர் ஆய்வர்களிடம் முன் அனுமதி பெற வேண்டும்.குடியரசு தினத்தில், நிறுவனங்கள் இயங்க ஆய்வர்களிடம் உரிய படிவத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளதா, தொழிலாளர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து, தொழிலாளர் துறை சார்பில் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது.177 நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 78 கடைகள், 77 உணவு நிறுவனங்கள் விதி மீறியது தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, தவறிழைத்த நிறுவனங்களுக்கு அதிகபட்சம் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.தொழிலாளர்களை பணியமர்த்திய நிறுவனங்களில், உரிய மாற்று விடுப்பு அல்லது இரட்டிப்பு ஊதியம் வழங்கப்பட்டதா என அடுத்த மாதம் ஆய்வு செய்யப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை