உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தலைமை அஞ்சலகத்தில் பரிவர்த்தனை இல்லா நாள்

தலைமை அஞ்சலகத்தில் பரிவர்த்தனை இல்லா நாள்

கோவை; கோவை கூட்ஷெட் ரோட்டில் உள்ள தலைமை அஞ்சலகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் அனைத்து துணை, கிளை அஞ்சலகங்களில், நேற்று, பரிவர்த்தனை இல்லா நாள்' கடைபிடிக்கப்பட்டது. இன்று முதல், தபால் துறையில் புதிய மென்பொருள் பயன்பாடு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், இதை எவ்வித சிரமம் இன்றி செயல்படுத்த, முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, புதிய மென்பொருள் பயன்பாடு செயல்படுத்தப்பட உள்ள, கோவை கூட்ஷெட் ரோட்டில் உள்ள, கோவை தலைமை அஞ்சலகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் அனைத்து துணை, கிளை அஞ்சலகங்களில், சிறு சேமிப்பு கணக்குகளில் மு தலீடு செய்வது மற்றும் கணக்கில் இருந்து பணம் எடுப்பது, பதிவுத் தபால், விரைவுத் தபால், பார்சல் அனுப்புவது போன்ற பணப்பரிவர்த்தனை சேவைகளும் பெற இயலாது என, கோவை கோட்ட தபால் துறை சார்பில், வாடிக்கையாளர்களுக் கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், ஆர்.எஸ்.புரம் தலைமை அஞ்சலகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் துணை, கிளை அஞ்சலகங்கள் வாயிலாக, இந்த சேவை இருந்ததால், வாடிக்கையாளர்கள் பலர் அதை பயன்படுத்திக் கொண்டனர். இதனால், சிரமம் தவிர்க்கப்பட்டது. ஆதார் சேவை வழக்கம் போல் செயல்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி