கஞ்சா விற்பனை செய்த வடமாநிலத்தவர் கைது
தொண்டாமுத்தூர்: தீத்திபாளையத்தில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.தீத்திபாளையம், ஐயா சாமி கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள முள்காட்டில், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடப்பதாக, பேரூர் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கு சந்தேகத்திற்குரிய வகையில், கையில் சாக்குப்பையுடன் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் பீகார் மாநிலம், சுபோல் மாவட்டத்தை சேர்ந்த பினைகுமார்,22 என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது. பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, பினை குமாரை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து, 1.1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.