உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிறந்த நாள் கொண்டாட்டத்தில் வடமாநில தொழிலாளி கொலை

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் வடமாநில தொழிலாளி கொலை

கிணத்துக்கடவு: அரசம்பாளையத்தில், சக தொழிலாளியின் பிறந்த நாள் விழாவில், வடமாநில தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் பூபேந்திரா, 21; கூலி தொழிலாளி. இவர், கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, அரசம்பாளையம் -- காரச்சேரி ரோட்டில் தனியார் காஸ் நிரப்பும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு, நிறுவனம் முன், சக தொழிலாளியின் பிறந்த நாளை, அங்கிருந்தவர்கள் மது குடித்து கொண்டாடினர். அப்போது, முன் விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில், 17 வயது சிறுவர்கள் இருவர் மற்றும் சவுரப், 20, ஆகிய மூவரும் சேர்ந்து, பூபேந்திராவிடம் தகராறு செய்துள்ளனர். ஒருவர் இரும்பு கம்பியால், பூபேந்திராவின் தலையில் பயங்கரமாக தாக்கியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். கிணத்துக்கடவு போலீசார் மூவரிடமும் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை