உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகரை விட்டு வெளியேற 27 ரவுடிகளுக்கு நோட்டீஸ்

மாநகரை விட்டு வெளியேற 27 ரவுடிகளுக்கு நோட்டீஸ்

கோவை; தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும், 27 நபர்களை மாநகரில் இருந்து வெளியேற, மாநகர போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.கோவை, மாநகர பகுதிகளில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள், பொது மக்களை அச்சுறுத்தி புகார் அளிக்க விடாமல் தடுப்பது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அச்சம், தயக்கம் உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க முன்வராததால், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதில், சிரமம் ஏற்படுகிறது.இது போன்ற நபர்கள் குறித்து, விசாரணை நடத்தி கண்டறிய, கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி, மாநகர் முழுவதும்,27 நபர்கள் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டும், அவர்கள் மீது புகார்கள் வராமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் அவர்கள் சென்னை மாநகர காவல் சட்டம், 1888, பிரிவு 51 - ஏ கீழ் அவர்களை,மாநகரில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டார்.இது குறித்து, அந்த 27 நபர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதன் பின்னர், அவர்கள் அனைவரும் ஆறு மாதத்திற்கு மாநகரில் வசிக்கக்கூடாது என, போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். உத்தரவை மீறும்நபர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ashok Subramaniam
ஜன 14, 2025 22:30

ரவுடிகள்னு தெரியும்.. பிடிச்சு உள்ள வெக்க வேண்டியதுதானே. ரொம்ப வேண்டாம்.. அவங்கள பிடிச்சு உள்ள வெச்சிட்டு, அப்புறம் ஒரு நாள் ஒரு 2 நாளைக்குப் புகார் கொடுக்கும் நாளா வெச்சா, கொடுக்கவேண்டியவங்க வந்து கொடுத்துட்டுப் போறாங்க.. தொடர் குற்றங்கள் பண்றவங்கன்னு தெரியும். அப்புறம் என்ன தயக்கம்.. அவங்க கிட்ட வாங்கின காசுக்கு விசுவாசமா? அல்லது அவங்களோட அரசியல் ஆதரவைக் கண்டு பயமா? தும்பவிட்டு வாலைப் பிடிக்கவா காவல் துறை...?


Pushpa Gokul
ஜன 14, 2025 11:31

கிரேட் action


முக்கிய வீடியோ