உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு; மாணவர்களுக்கு சான்றிதழ்

என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு; மாணவர்களுக்கு சான்றிதழ்

வால்பாறை; வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டுநலப்பணி திட்ட முகாம் நிறைவு விழா நடந்தது. வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் காலாண்டு விடுமுறையில் நாட்டுநலப்பணி திட்ட முகாம் நடந்தது. ஒரு வாரம் நடைபெற்ற முகாமில் பங்கேற்ற மாணவர்கள் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தல், மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர். இது தவிர, போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு, பேரிடர் மேலாண்மை பயிற்சி, சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு விழிப்புணர்வு, நினைவாற்றல் மேம்பாட்டு பயிற்சிகளில் ஈடுபட்டனர். இந்நிலையில், முகாம் நிறைவு விழா பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ரா ஜ் தலைமையில் நடந்தது. முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கபட்டன. திட்ட அலுவலர் சுப்ரமணியம், உதவி திட்ட அலுவலர் ராகவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ