மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா
13-Jan-2025
கோவை; பி.எஸ்.ஜி., செவிலியர் கல்லுாரியின் 31வது விளக்கேற்றும் விழா, பி.எஸ்.ஜி., கலையரங்கத்தில் நடந்தது. கல்லுாரியின் முதல்வர் ஜெயதீபா தலைமை வகித்தார்.முதலாம் ஆண்டு செவிலியர் மாணவ மாணவியர், முதன் முறையாக சீருடையில் விளக்கு ஏற்றி, செவிலியர் பயிற்சியில் நுழைவதை, அங்கீகரிக்கும் வகையில் இந்த விழா நடந்தது.தென்கிழக்கு ஆசிய பிராந்திய தலைவர் ரூபா ராவத் சிங்கவி, உலக சுகாதார அமைப்பின் ஒத்துழைப்பு மையம் அவசரநிலை சிகிச்சை டாக்டர் செவரின் வில்லியூமியர், சுவிட்சர்லாந்து லாசோர்ஸ் நர்சிங் பள்ளி பேராசிரியர் ஷ்மிட் மரியேல், பி.எஸ்.ஜி., நர்சிங் கல்லுாரி துணை முதல்வர் மீரா, செவிலியர் கண்காணிப்பாளர் அனுராதா ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.தொடர்ந்து, முதலாமாண்டு மாணவர்களுக்கு தீபஒளியை அவர்கள் வழங்க, ஒளியேற்றியமாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.பி.எஸ்.ஜி., சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குனர் புவனேஸ்வரன், பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்.அண்ட் ஆர்., முதல்வர் டாக்டர் சுப்பராவ், துணை முதல்வர் ஜெகதீஸ்வரராஜ், பி.எஸ்.ஜி., இன்ஸ்டிடியூட் ஆப் ஆன்காலஜி முதல்வர் பாலாஜி, பி.எஸ்.ஜி., பிசியோதெரபி கல்லுாரி முதல்வர் மகேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
13-Jan-2025