உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒடிசா தொழிலாளி கொலை சக தொழிலாளர் நால்வர் கைது

ஒடிசா தொழிலாளி கொலை சக தொழிலாளர் நால்வர் கைது

அன்னுார்: ஒடிசாவை சேர்ந்த தொழிலாளியை கொலை செய்த சக தொழிலாளர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.அன்னுார் அருகே புதுப்பாளையத்தில் தனியார் ஸ்பின்னிங் மில்லில் 45 நாட்களுக்கு முன்பு ஒடிசா தொழிலாளர்கள் சிலர் வேலைக்கு சேர்ந்தனர்.கடந்த 30ம் தேதி இந்த மில்லில் பணிபுரியும் ஒடிசா மாநிலம், பாலேஸ்வரரைச் சேர்ந்த தாமோதர் மகாலிக் மகன் பினோத் மகாலிக், 27. என்பவர் தவறி கீழே விழுந்து இறந்ததாக, அன்னுார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யப்பட்டது. தவறி விழுந்து இறந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் பிரேத பரிசோதனையில் அவர் தாக்கப்பட்டு இறந்தது தெரிய வந்தது.இதையடுத்து இந்த வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது. விசாரணையில், அந்த மில் மேற்பார்வையாளர் ஒடிசா மாநிலம், ஹரிபூரைச் சேர்ந்த ஸ்ரீதர் சேத்தி, 44, என்பவரிடம் பினோத் மகாலிக் தகராறு செய்ததும், ஸ்ரீதர் சேத்தியின் மனைவி குறித்து தகாத வார்த்தை பேசியதாகவும் தெரிகிறது.இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீதர் சேத்தி, அவரை அடிக்கும்படி சக தொழிலாளர்களிடம் கூறியுள்ளார்.ஒடிசா மாநிலம், ஹரிபூரை சேர்ந்த சைதன்ய மாலிக், 30. சிபன் சேத்தி, 23. பதாரக்கைச் சேர்ந்த சந்தோஷ் மாலிக், 28. ஆகிய மூவரும் கல்லால், வினோத் மகாலிக்கை தாக்கி கொலை செய்தது தெரிய வந்தது.இதையடுத்து அன்னுார் போலீசார் கொலையாளிகள் நான்கு பேரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ