உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கட்டுமான கனரக வாகன தயாரிப்பில் ஓகோ

கட்டுமான கனரக வாகன தயாரிப்பில் ஓகோ

கோவை; 'புல்' நிறுவனத்தின் கட்டுமான கனரக வாகனங்கள், கோவையிலிருந்து டில்லிக்கு நேற்று ரயில் வாயிலாக எடுத்துச் செல்லப்பட்டன.கோவை சூலுார் காங்கேயம்பாளையம் பகுதியில், புல் மெஷின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நிறுவனத்தில் பல்வேறு கட்டுமான கனரக வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன.நிறுவனம் சார்பில், டில்லியில், புதிய கிளை ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த புதிய கிளைக்கு கோவை இருகூரில் இருந்து, நேற்று சரக்கு ரயில் வாயிலாக, 70 கட்டுமான கனரக எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பார்த்திபன் கூறியதாவது:இத்தொழிலில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவில் கோவை மாவட்டம் காங்கேயம்பாளையத்தில் தயாரிக்கப்படும் எந்திரங்கள், 65 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.இந்தியாவில் எங்கள் நிறுவனம், இரண்டாம் இடம் பிடித்துள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களை முந்தி வெற்றி பெற்றுள்ளோம். வடமாநிலங்களில் இவற்றுக்கு அதிக தேவை உள்ளது.இப்பிரிவில் சர்வதேச அளவில் பல நிறுவனங்கள் உள்ளன. ஆனால், எங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளில் உள்ள பிரத்யேக வசதிகள், எரிபொருள் சேமிப்பு ஆகிய வசதிகளால், வாடிக்கையாளர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது.ஒரு மணி நேரத்துக்கு, ஒரு லிட்டர் எரிபொருள் மிச்சமாகும். அது பெரிய நன்மை. குறிப்பாக, வளரும் நாடுகளுக்கு ஏற்ற வகையில், எந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எங்களது தயாரிப்புகளில், 55 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.இந்தியாவில் ஆண்டுக்கு, 46 ஆயிரம் கட்டுமான கனரக வாகனங்கள் விற்பனையாகின்றன. ஆண்டுக்கு, 4,000 எந்திரங்கள் வரை தயாரிக்கிறோம். ஆண்டுக்கு, 9,000 வாகனங்கள் என்ற இலக்கைநிர்ணயித்துள்ளோம்.-பார்த்திபன், நிர்வாக இயக்குனர், 'புல்'


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !