உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை ராமர் கோவிலில் வரும் 22ல் தர்மதீபம் ஏற்றும் வைபவம்

கோவை ராமர் கோவிலில் வரும் 22ல் தர்மதீபம் ஏற்றும் வைபவம்

கோவை, : அயோத்தி ராமர்கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளில் கோவை கோதண்டராமர் தேவஸ்தானத்தில் 2,008 தர்மதீபங்கள் ஏற்றும் வைபவம் நடக்கிறது.இதுகுறித்து கோதண்டராமர் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் என்.வி.நாக சுப்ரமணியன், செயலாளர் டி.பி.விஸ்வநாதன் ஆகியோர் கூறியதாவது:அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் ஒவ்வொரு ஹிந்துக்களின் கனவு, 500 ஆண்டுகளுக்குப்பின்பு நிறைவேறியுள்ளது மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அயோத்தியில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளில் கோவை ராம்நகரிலுள்ள கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில் மிகப்பெரும் வைபவமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன் படி ஜன.,22 அன்று காலை 6:00 மணிக்கு பூபால ராகத்தில் மங்களவாத்தியம் இசைக்கப்படுகிறது. 7:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை சேவாகாலம் கோஷ்டி. 8:00 மணிக்கு விஷ்ணுசகஸ்ரநாம பாராயணம், 9:00 மணிக்கு ராம்நகர் பஜனை கோஷ்டியினரின் ராமநாம சங்கீர்த்தனம்.10:00 மணிக்கு நாமபஜன் மண்டலியினரின் ராமநாம சங்கீர்த்தனம், 11:00 மணிக்கு ராமர் கோவில் வளாகத்திலுள்ள அபிநவவித்யா தீர்த்த மண்டபத்தில் சீதாராமர் திருக்கல்யாண மஹோற்சவம் நடக்கிறது. பகல் 1:00 மணிக்கு பிரசாத வினியோகமும், மாலை 4:00 மணிக்கு ஸ்ரீ கார்த்தி ஞானேஸ்வர் குழுவினரின் நாம சங்கீர்த்தனமும், 4:00 மணிக்கு வேதபண்டிதர்களின் வேதகோஷ முழக்கமும் நடக்கிறது.மாலை 6:00 மணிக்கு கோவில் மஹா மண்டபத்தில், ஜோதிட சக்ரவர்த்தி ஏ.எம்.ஆர்., கோவில் அறங்காவலர் குழு தலைவர் நாகசுப்ரமணியன் ஆகியோர் தர்ம தீபம் ஏற்றி வைக்கின்றனர்.தொடர்ந்து 2,008 விளக்குகள் கோவில் சுற்றுப்பிரகாரத்தில் பக்தர்கள் ஏற்றி வைக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. மாலை 6:20 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிவிக்கப்படும் சீதா, லட்சுமண சமேத கோதண்டராமர் உற்சவராக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். மாலை 6:30 மணிக்கு ராமர் சரித்திர நாட்டிய நாடகம் பவித்ரா சீனிவாசன் மற்றும் லாவன்யா சங்கர் குழுவினரால் அரங்கேற்றப்படுகிறது. நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை